Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.04.2026) | 1PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.04.2026) | 1PM Headlines | ThanthiTV
Summary
  • மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள்  மே 2 ம் தேதி தமிழகம் வருகின்றனர்....62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

  • தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆலோசனை மேற்கொண்டார்... தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை ஆணையர்கள், துணை ஆணையர்கள் பங்கேற்றனர்..

  • வாக்கும் எண்ணும் பணிகள் குறித்து சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது..தபால் வாக்குகள், ஈ.வி.எம். எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்பதோடு, படிவங்களை கையாள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது..

  • தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.....வடகிழக்கு மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது... மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி வரை 61 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது....

  • கொடைக்கானலில் நான்கு நாட்கள் தங்கி ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக மதுரை கிளம்பினார்...தங்கும் விடுதி வாசலில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்...

X

Thanthi TV
www.thanthitv.com