Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2026) | 1PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2026)

23 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது...

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் போட்டியிடும் நிலையில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும், செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியிலும், கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்...

கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதியிலும், ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியிலும், சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியிலும் களம் காண்கின்றனர்...

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆலோசனை மேற்கொண்டார்...

அண்ணா அறிவாலயத்தில் நடந்த சந்திப்பில் மமக போட்டிய விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை அவர் வழங்கினார்...

தோழமை கட்சிகளுடன் ஆலோசித்தே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

மதவாத அரசியல், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்திற்கு எதிராக இணைந்து போராடி இலக்கை அடைவோம் என்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்....

ஆவணங்கள் இன்றி ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல், எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்ற வணிகர்களின் கோரிக்கையை, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்...

மருத்துவ காரணங்களுக்காக எடுத்துச் செல்லும் பணத்திற்கு, வாட்ஸாப்பில் கூட ஆதாரத்தை காட்டலாம் என்றும் அவர் கூறியுள்ளார்....

X

Thanthi TV
www.thanthitv.com