Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2026) | 1 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2026) | 1 PM Headlines | ThanthiTV
Summary
  • தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

  • 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்...

  • மையங்களில் வாக்குப்பதிவு மும்முரம்...

  • வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது...

  • தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்...

  • வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்...

  • மேற்குவங்கத்தில் முதற்கட்டமாக 152 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

  • பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது...

  • சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது மனைவியுடன் வந்து வாக்களித்தார்...

  • துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகன் இன்பநிதியுடன் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினார்...

  • சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தவெக தலைவர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்....

  • திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்த அஜித்குமாரை காணக்குவிந்த ரசிகர்களால் பரபரப்பான சூழல் நிலவியது...

  • ஆரவாரம் செய்த ரசிகர்களை கண்டு அஜித் ஹார்ட் காண்பித்து அன்பை வெளிப்படுத்தினார்...

  • தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்...

  • வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com