Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.03.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.03.2026)

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது எதற்காக? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்...

தமிழ்நாடு Versus டெல்லி என்று தாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்...

தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன், வெகு விரைவில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்...

திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்...

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 4து நாளாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையைச் சட்டமன்ற தேர்தலையொட்டி, விசிக சார்பில் நாளை முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

விருப்ப மனு கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

சத்துவாச்சாரியில் தேர்தல் விதிகளை மீறியதாக வேலூர் மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

அதிமுக கொடுத்த புகாரின் பேரில் மேயரின் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, 400 ரூபாய் உயர்ந்துள்ளது...

ஒரு கிராம் தங்கம்13 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com