Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.03.2026) | 1 PM Headlines | ThanthiTV
சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்...திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் விசிக தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், தொகுதி பங்கீடு விரைவில் இறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
தொகுதி பங்கீடு தொடர்பான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியுள்ளது...டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என தொகுதி பங்கீடு குழுவிடம் தெரிவித்துள்ளதாக சந்திப்புக்கு பின் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்...
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி 49 பிரிவுகளில் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது...சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்....
தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி முறை முன்னெடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது...சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு நாடாளுமன்ற தொகுதி உருவாக்க நடவடிக்கை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவம் என பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது...
தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி முறை முன்னெடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது...சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு நாடாளுமன்ற தொகுதி உருவாக்க நடவடிக்கை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவம் என பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது...
மொழி, கலை, தொழில் அடிப்படையில் திருச்சி, சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது...தலைமைச் செயலகம், சட்டமன்றம் திருச்சிக்கு மாற்றப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற 123 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...சம்பந்தப்பட்ட தனியார் கேஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்தும் குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்...
ஈரானின் மிக முக்கியமான எரிசக்தி கட்டமைப்பான சவுத் பார்ஸ் (South Pars) மீது இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது...இந்த தாக்குதலால் ஈரானில் இருந்து ஈராக் நாட்டிற்குச் செல்லும் எரிவாயு விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது....
