Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.03.2026) | 1 PM Headlines | ThanthiTV
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது...
திமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொண்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்..பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, திமுக கூட்டணியில் அணி சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்...
கடந்த தேர்தலில் திமுக-வுக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும்படியான ஆட்சியை வழங்கியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும் என்றும் எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்..
ராணிப்பேட்டையில் மாட்டுச் சந்தையில், உரிய ஆவணங்கள் இல்லையென கூறி வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தது.....தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால் புதுக்கோட்டை மாட்டுச் சந்தையில் விற்பனை மந்தமடைந்தது...
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் சசிகலா விருப்பமனு வாங்கவுள்ளார்.விருப்பமனுக்களை மார்ச் 23ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என சசிகலா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு 90 தொகுதிகள் மற்றும் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி தருவதாகப் பேரம் பேசப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்...பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்...மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது...
கடும் பனிப்பொழிவால் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தளமான சோலாங் பள்ளத்தாக்கு வொன்டர் லேன்ட்போல் காட்சி அளிக்கிறது,.திரும்பும் திசையெல்லாம் வெண்போர்வை போர்த்தியதுபோல் இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
