Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2025) | 1PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2025) | 1PM Headlines | ThanthiTV
  • முதலமைச்சர் விஜய் மீது தனக்கு பொறாமை ஏதும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்....தனக்கும் விஜய்க்கும் 28 ஆண்டு கால வயது வித்தியாசம் இருப்பதாகவும் விஜய் முதல்வராகிவிட்டார் என கேட்டவுடன் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்...

  • அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக நிதி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்....முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையும் பின்னரே விரிவாக்கம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்...

  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து...ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்....

  • கேரள முதலமைச்சராக சதீசன் நாளை பதவியேற்கிறார்...பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்...

  • திருவனந்தபுரம் - டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....மத்திய பிரதேசத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ஏ.சி பெட்டியில் தீ பற்றிய நிலையில் உடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்....

  • குடியரசு தலைவர் ஒப்புதலை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33ல் இருந்து 37 ஆக அதிகரித்துள்ளது...உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து 38 நீதிபதிகள் உள்ளனர்.....

X

Thanthi TV
www.thanthitv.com