Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.02.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.02.2026)
  • பிப்ரவரி 17ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

  • பிரதமர் மோடி, 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா புறப்பட்டார். மலேசிய பிரதமர் உடன் சந்திப்பு நடக்க உள்ள நிலையில், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

  • மலேசிய பயணம் இருநாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்தும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடனான சந்திப்பை எதிர்நோக்குகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

  • சுற்றுப்பயணத்தின்போது மலேசியாவில் வசிக்கும் தமிழர்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். பிரதமரை சந்திக்க மலேசியவாழ் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.,

  • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இறக்குமதி 3 மடங்கு அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. வர்த்தக ஒப்பந்த‌த்தால் இந்திய விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com