Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2026) | 1PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2026)

சட்டமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 600 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.....

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

இறுதி வேட்பாளர் பட்டியல்

நாளை மறுநாள் வெளியாகிறது

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய்யின் வேட்புமனுக்கள் ஏற்பு

பெரம்பூர் தொகுதியில் சுயேட்சைகளின் எதிர்ப்பையும் மீறி, தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது...

திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது..........

கடலூரில் 9ம் தேதி விஜய் பிரசாரம் - அனுமதி கோரி கடிதம்

தவெக தலைவர் விஜய், நாளை மறுதினம் கடலூரில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்....

ஒரு இடத்தில் பொதுக்கூட்டத்திற்கும், மூன்று இடங்களில் வாகனத்தில் நின்று பிரசாரம் செய்யவும் அனுமதி கேட்டு தவெகவினர் போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் ஆன்லைனில் மனு அளித்துள்ளனர்..

பணக்கார வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் சொத்து மதிப்பு ரூ.1,048 கோடி

தமிழகத்தின் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் ஆயிரத்து 48 கோடி ரூபாய் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்....

139 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும், 909 கோடி ரூபாயிலான அசையா சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் லீமாரோஸ் மார்ட்டின் குறிப்பிட்டுள்ளார்..

நகைகள் - ரூ.139 கோடி

அசையா சொத்துகள் - ரூ.909 கோடி

X

Thanthi TV
www.thanthitv.com