Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2026) | 6 AM Headlines | ThanthiTV
20 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது... 6 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதியில் பாஜகவும், 3 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதிகளில் அமமுகவும் போட்டியிடுகிறது...
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக 27 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது... மொத்தம் 32 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்...
பெரியகுளம், பூந்தமல்லி, மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது... மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் களம் காண்கிறது...
சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, முதற்கட்டமாக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது... கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் இராவணன், செஞ்சியில் கணேஷ் குமார், அம்பத்தூர் தொகுதியில் கே.என்.சேகர் போட்டியிடுகின்றனர்..
மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை , தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கீடு... புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது...
