Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2026)

3 நாள் இந்தோனேசிய பயணத்தை முடித்துகொண்டு, ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...

மெல்போர்னில் நடைபெறும் இந்திய - ஆஸ்திரேலிய ஆண்டு உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்...

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் 'வந்தே மாதரம்' இசையுடன் இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்துள்ளனர்...

இந்திய சமூகக் கூட்டமைப்பின் கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அவர்களின் கலைத்திறமைகளைப் பாராட்டி மகிழ்ந்தார்...

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்...

மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்ட அவர், பெண்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்...

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமின்...

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கும் முன் ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு வேளை திருவல்லிக்கேணி போலீஸ் முன் ஆஜராக வேண்டும்...

சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com