Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26.07.2026) | 7 PM Headlines | Thanthi TV
வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கலாகிறது...
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இரு அவைகளிலும் விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு...
மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுக்கொண்டார்...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு...
மாணவர்களின் 37 நாள் தொடர் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ள CJP தலைவர் அபிஜித் தீப்கே, இது வெறும் தொடக்கம் மட்டுமே என தெரிவித்துள்ளார்...
தங்களது கோரிக்கைகள் மற்றும் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி தொடரும் என அவர் கூறியுள்ளார்...
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்...
ஜூலை 20ஆம் தேதி காவல்துறையினர் வரம்பு மீறி நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்...
இந்தியா செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் தற்கொலைப்படை தீவிரவாதிகளை உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.....
இந்தியா வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டதாகவும், பாகிஸ்தான் தனது சதித்திட்டங்களிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்...
