Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2026)

முதலமைச்சர் விஜய் தலைமையில் 2 நாட்கள் நடைபெற்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு நிறைவு...

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்...

தமிழகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் வாகனங்களுக்கு பேன்சி நம்பர் பெற நடவடிக்கை....

புதிய கட்டண விகிதபடி பயனாளிகள் நேரடியாக ஆன்லைன் மூலம் பேன்சி எண் பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு...

பாஜக ஆதரவுடன் அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக, அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்...

திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கும், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதற்கும் இதுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்..

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை மறுநாள் தவெகவில் இணைகின்றனர்..

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சேர்ந்து தவெகவில் இணைய உள்ளனர்..

அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க எஸ்.பி.வேலுமணி மறுப்பு....

வீரமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு பதவி தராததால் எஸ்.பி.வேலுமணி அதிருப்தி...

எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் திமுக கையெழுத்து...

கடந்த 8 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்திருந்த நிலையில், திமுக உள்ளிட்ட 23 கட்சிகளும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன...

X

Thanthi TV
www.thanthitv.com