Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.01.2026) | 6 PM Headlines | Thanthi TV
ஆபரண தங்கத்தின் விலை, காலையில் 4 ஆயிரத்து 800 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் 2 ஆயிரத்து 800 ரூபாய் குறைந்துள்ளது...சென்னையில் ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரத்து 850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 26 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை காலையில் 10 ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது...ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது...வட மாவட்டங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் நிலவும் என்றும் அந்த மையம் கணித்துள்ளது...
அனைத்து பள்ளிகளிலும் உயர்தர சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...இலவச நாப்கின் வழங்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
விஜயின் ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது...
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி பிப்ரவரி ஐந்தாம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது......பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது...
பிப்ரவரி 4ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது...
காந்தியை மறைத்து, நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம்..மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...
பாஜக தலைமையில் NDA கூட்டணி என்று கூறுவது தவறு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...தமிழகத்தில் NDA கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்றும் விளக்கம் அளித்தார்...
சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது...கருத்துகேட்கும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்...
அதிகார மமதையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த நிர்வாகிகள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்....காங்கிரசுக்கு தன்மானம் தான் முக்கியம் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி என்றும் அவர் கூறியுள்ளார்..
