Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.08.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.08.2026)

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்...

"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது..." என்ற திருக்குறளுடன் 2026-2 7 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது...

2026-27 நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் கூறியுள்ளார்...

3 ஆயிரம் கோடியில் மூலதன கடன் மற்றும் 500 பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்...

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்பதால் பிரத்யேக திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்...

நடப்பாண்டில் 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பாசன வசதிகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்...

வேளாண்மையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தவும் மகளிர் அதிகாரமளித்தலை ஊக்குவிக்கவும் "வான்மகள்" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி அளிக்கும் "வான்மகள்" திட்டத்திற்காக 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....

ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு...

வேளாண் தொழில்நுட்பத்தை விரல் நுனியில் கொண்டு சேர்க்க AI அடிப்படையிலான உழவர் செயலியை உருவாக்க 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com