Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.06.2026) | 6 AM Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.06.2026) | 6 AM Headlines | Thanthi TV
  • மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சு.....தமிழகத்திற்க்கு நிலுவை வைத்துள்ள 3 ஆயிரத்து 284 கோடி ரூபாய் கல்வி நிதியை, எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கவும் வலியுறுத்தல்...

  • நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அளிக்க இருந்த இரவு விருந்து ரத்து....ஓமன் அருகே இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததால், இரவு விருந்து ரத்து செய்யப்பட்டதாக தகவல்...

  • குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள், மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறத் தகுதியானவர்கள் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு....வாகன விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரிய வழக்கில், வீட்டு பராமரிப்பு சேவை இழப்பு என்ற பெயரில், மாதம் 30 ஆயிரம் ரூபாயை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு..

  • ஒரே நாளில், இருவேறு சாலை விபத்துகளில் பள்ளி மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்.....உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு...

  • வாக்கு திருட்டு.... ஆட்சி திருட்டை போல, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து எம்.பி. சீட்களை திருடுவதாக ராகுல் காந்தி காட்டமான விமர்சனம்....மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவு..

  • 260 பேரை பலிகொண்ட அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின் முதலமாண்டு நினைவு தினம்...ஓராண்டாகியும் விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதில் தாமதம் நீடிப்பு...

  • உலகில் அதிக ரசிகர்களை கொண்ட பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர், கோலாகலமாக தொடங்கியது...மெக்சிகோவில் வண்ணமயமான வாணவேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற தொடக்க விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்...

  • உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரம்.......மெக்சிகோ வீரர்கள், ஜூலியன் அண்ட்ரே குவானிஸ், ரவுல் ஜெமிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்த...

X

Thanthi TV
www.thanthitv.com