Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.07.2026) | 6AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.07.2026)

தமிழ்நாட்டிற்கு காவிரியில் நான்கரை டி.எம்.சி. தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.....

15 நாட்களுக்கு விநாடிக்கு மூவாயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் ஆணை...

மேகதாது அணை தொடர்பாக, 2019ல் கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்...

திட்டத்தை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

வினாத்தாள் கசிவை தடுக்கும் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேறியது....

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது...

பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு.....

வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்பிக்க முடியாது... அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை....

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் 4 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து...

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நிறுவனங்கள் சென்னையில் முதலீடு செய்ய உள்ளன....

X

Thanthi TV
www.thanthitv.com