Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.02.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள்
  • தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது... மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்...

  • மகளிர் உரிமை தொகையை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி - உதயநிதி. பெண்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட‌து எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..மோடி, ED-ஐ பார்த்து பயப்பட மாட்டோம் எனவும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...

  • வேலூரில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி - தவெக அறிவுறுத்தல்

  • வேலூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில், QR குறியீடு கொண்ட நுழைவு சீட்டு உள்ள 4 ஆயிரத்து 900 பேருக்கு மட்டுமே அனுமதி...விஜய் வாகனத்தை பின்தொடர்வதை தவிர்க்குமாறு, தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது...

  • நமோ பாரத் ரேபிட் மெட்ரோ ரயில் சேவை - பிரதமர் தொடங்கி வைத்தார் .உத்தரப்பிரதேசம் - டெல்லியை இணைக்கும் நமோ பாரத் ரேபிட் மெட்ரோ ரயில் சேவையை, மீரட்டில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்...82 கி.மீ. நீளமுள்ள டெல்லி - மீரட் வழித்தடத்தில் இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

  • ஆப்கானிஸ்தான் மீது பாக்., தாக்குதல் - இந்தியா கண்டனம்

  • ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது...ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளது...

  • டி20 WC சூப்பர் 8 சுற்று - தென்னாப்பிரிக்கா வெற்றி

  • இந்தியாவுடனான டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது...188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது...

  • பவர்பிளே விக்கெட்டுகளே தோல்விக்குக் காரணம்" தென்னாப்பிரிக்காவுடனான தோல்விக்கு பவர்பிளே விக்கெட்டுகளே காரணம் என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்...தோல்வியிலிருந்து பாடம் கற்று பலமாகத் திரும்புவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com