Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2026) | 6AM Headlines | ThanthiTV
விணாத்தாள் கசிவு எதிரொலியாக, நாடு முழுவதும் நீட் மறுதேர்வு இன்று நடக்கிறது....மதியம் இரண்டு மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு...
நாடு முழுஅதும் 551 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 440 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெறுகிறது....22 லட்சத்து 79 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலையில், 6 ஆயிரத்து 669 ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்...
12வது சர்வதேச யோகா தினம், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது...கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி காலையில் நடைபெறுகிறது..
திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட இரண்டாயிரத்து 500 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்...சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்...
கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போடியிட்டு வெற்றி பெற்ற ஜெகநாத் மிஸ்ரா, தாம் நடத்தி வந்த, நமது மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினை தவெகவுடன் இணைத்தார்...அக்கட்சியில் பயணித்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேறட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்...
நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு....மருத்த்வமனை சுவரை தொட்டபோது, மேற்பூச்சுகள் இடிந்து விழுந்ததால் அமைச்சர் அதிர்ச்சி...
