Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2026) | 6 AM Headlines | ThanthiTV
முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின...
67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது...
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழகத்தில் 55 புதிய மற்றும் 50 விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு அறிக்கை...
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
வெற்றித் தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 4ஆயிரத்து 476 கோடி ரூபாய் முதலீட்டிலான 8 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்...
2 ஆயிரத்து 676 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்களும், 777 கோடி ரூபாய் செலவிலான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்...
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி திருத்தம் தற்காலிகமாக நிறுத்தம்...
பழைய வரித்தொகையே தொடரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்...
கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது...
மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் வந்தே மாதரம் பாடலுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது...
