Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.07.2026) | 6 AM Headlines | ThanthiTV
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது...
பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 3.51% உயர்ந்து 78.68 டாலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் 3.47% உயர்ந்து 73.89 டாலராகவும் வர்த்தகமாகிறது...
பெரம்பூர் தொகுதி மக்களை சந்திக்கும் முதலமைச்சர் விஜய், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்....
பெரம்பூர் தொகுதி மக்களுக்கான பிரத்யேக செயலியை அறிமுகம் செய்து வைத்து, இ-சேவை மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றிப் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்காக, மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் கூடுதலாக 41 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன...
ஏற்கனவே மாணவர்களுக்காக 25 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதல் பேருந்துகள் மூலம் மாணவர்கள் எளிதாகப் பள்ளிக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் மாநாடு...
போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெற்றது..
வியட்நாம் சென்ற லாவா நிறுவன ஏஜென்டுகள் 86 பேர் பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது...
படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டுவருவதற்கான உதவிகளை செய்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது...
