Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.08.2026) | 6 AM Headlines | ThanthiTV
தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் விஜய்...
மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே இருக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்படுகிறது...
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...
காரசார விவாதங்களுக்குப் பின், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது....
மாணவர்களின் 12 ஆண்டு கால கல்வியை ஒருநாள் நடத்தப்படும் நீட் தேர்வு தீர்மானிக்கக் கூடாது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்...
நீட் தேர்வு மீது நாடு முழுவதும் மாணவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்...
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்...
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், மாநிலங்களின் உரிமையை மதிப்பதே கூட்டாட்சி என்றும் அவர் தெரிவித்தார்...
நீட் எதிர்ப்பு தீர்மானம் மீது திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா மற்றும் தவெக அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது...
தீர்மானத்தை திமுக ஆதரிப்பதாக கூறிய முத்துராஜா, நீட் தேர்வுக்கு எதிராக திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் தீர்மானத்தில் இல்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்...

நீட் எதிர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ. முத்துராஜாவின் விமர்சனத்திற்கு அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா பதிலளித்தனர்...
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியவர் முதல்வர் விஜய் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்...
நீட் எதிர்ப்பு தீர்மானத்தில் அரசியல் வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனா கேட்டுக்கொண்டார்...