Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.03.2026) | 6 AM Headlines | ThanthiTV
  • நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம், இன்று மாலை நிகழ உள்ளது..இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு பகுதிகளில் கிரகணத்தின் காட்சி முழுமையாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

  • ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா, இஸ்ரேல். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது...அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது...

  • இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து, ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது...இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் இருப்பிடத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது...

  • துபாயில் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல். துபாயில் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது...பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

  • துபாயில் இருந்து 217 பேருடன் சென்னை வந்த விமானம். இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக துபாயில் சிக்கி தவித்தவர்களில் முதற்கட்டமாக 217 பேருடன் 3 நாட்களுக்கு பின் விமானம் சென்னை வந்தது...தாக்குதலின் போது இரவு முழுவதும் பயங்கர சத்தம் கேட்டதால், ஓட்டல் அறையில் பயத்தில் தூங்காமல் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்...

  • என்.டி.ஏ. கூட்டணியில் யார், யாரை வழிநடத்துகிறார்கள் என்ற குழப்பம் நிலவுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...ஈ.பி.எஸ்.-ஐ மேடையில் வைத்துக்கொண்டே என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று பிரதமர் கூறியதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்..

  • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்...

  • பூஜை செய்ய அனுமதித்தால், தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com