Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2026) | 6AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2026)

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது......

அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், காவிரியில் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது....

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது......

கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி, காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்....

மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது..

தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 466 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது...

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது...

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது...

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தேசிய கலந்தாய்வு, வரும் 4ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

மாநில இடங்களுக்கான கலந்தாய்வு 13ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது...

ஆந்திர மாநிலம், போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்...

தொடர்ந்து 460 கோடியிலான செமிகண்டக்டர் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய அவர், 17 ஆயிரத்து 900 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com