Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.03.2026) | 6 AM Headlines | ThanthiTV
ஈரான் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 7 முக்கிய உயர்மட்ட அதிகாரிகளைத் துல்லியமான வான்வழித் தாக்குதல் மூலம் அழித்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது...
கமேனியின் மூத்த ஆலோசகர், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி, ஈரானின் ராணுவ அவசரகால தலைமையகத்தின் உளவுத்துறைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
ஈரானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன...
ஈரான் மீது வான் மற்றும் கடல் வழியாக அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச அதிகாரமிக்க தலைவரான காமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்...
இது ஈரானிய மக்களுக்குக் கிடைத்துள்ள நீதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒரு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
ஈரான் பாதுகாப்பு படை சரணடைந்தால் மன்னிப்பு உண்டு என்றும், தாமதித்தால் மரணம் தான் மிஞ்சும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு படையினர் போர் கப்பலில் இருந்து ஈரானை நோக்கி ஏவுகணைகளை ஏவும் வீடியோவை வெளியிட்டுள்ளது...
ஈரானின் முக்கிய தளங்கள் தகர்க்கப்படும் காட்சிகளும் வெளியாகி உள்ளது...
ஈரானின் உச்ச தலைவர் காமேனி பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்...
நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
காமேனியின் மரணம் குறித்து உறுதிப்படுத்தும் நிலையில் தாங்கள் இல்லை என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்...
காமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோர் கூறி வரும் நிலையில், குட்டரெஸ் இவ்வாறு கூறியுள்ளார்...
அபுதாபி விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்...
அபுதாபி விமான நிலைய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது...
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள பல குடியிருப்புகளை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்துவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்...
பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பக்ரைன் அரசு தெரிவித்துள்ளது...
துபாயில் உள்ள பாம் ஜுமேரா செயற்கை தீவுகள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் நட்சத்திர விடுதிகள் பற்றி எரிந்தன...
தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயமடைந்த நிலையில்,
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருகின்றன...
துபாய் விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அமீரக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது....
தாக்குதல் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், பழைய வீடியோக்களையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பகிர வேண்டாம் என்றும் துபாய் அரசு கேட்டுக்கொண்டுள்ளது....
ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு “எபிக் ஃப்யூரி“ என அமெரிக்கா பெயரிட்டுள்ளது...
ஈரானின் ஏவுகணைகளையும், ஏவுகணை உற்பத்தியையும் அழித்தொழிப்போம் என உறுதி பூண்டுள்ளது...
