Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.02.2026) | 6 PM Headlines | ThanthiTV
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்..அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தாக்கலாகும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது...
தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது...மாலை அணிந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை...தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...
234 தொகுதிகளிலும் தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்குகிறது திமுக...திமுக அரசின் சாதனைகளை முன்வைத்து 22 நட்சத்திரப் பரப்புரையாளர்கள் மக்களிடம் பரப்புரை மேற்கொள்கின்றனர்...
பிப்ரவரியில் காங்கிரஸ் சார்பில் 3 மாநாடுகள் நடைபெற உள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்...பிப்ரவரி மாத இறுதியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 37 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது...ஊதிய முரண்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைப்பு...
நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...அதிரடியாக ஆடிய இந்திய அணி 271 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது...
