Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05.08.2026) | 4 PM Headlines | Thanthi TV
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கூட்டுறவு துறைக்கு எட்டாயிரத்து 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் ஐந்தாயிரத்து 932 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்...
இந்து சமய அறநிலையத் துறைக்கு பட்ஜெட்டில் 708 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அறிவிப்பு....
திருக்கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பாதுகாப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
உலகளாவிய தமிழ்ச் சமூகம், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக, வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு சேவைகள் பிரிவு தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு....
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு பட்ஜெட்டில் ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கீடு......
பசுமைவழி ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவிப்பு....
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் 8 ஆயிரத்து 852 கோடி ரூபாய் ஒதுக்கீடு......
24 ஆயிரத்து 131 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணிகள் இவ்வாண்டில் நிறைவுபெறும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்...
