Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (23.02.2026)| 2 PM Headlines | ThanthiTV
தன் மீது விமர்சனங்களை முன்வைப்பது, தமிழக மக்களை விமர்சிப்பதற்கு சமம் என்று விஜய் கூறியுள்ளார்.......
நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் திடீரென கண் கலங்கியதால் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்......
முதலமைச்சர் ஸ்டாலின், எல்லோரையும் நண்பர்களாக கருதினால், கரூர் சம்பவத்தில் என் மீது பழியை தூக்கி போட்டது ஏன் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.....
மனசாட்சி இருந்தால் தன்மீது பழி போட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்...
மக்களை சந்திப்பதை சூழ்ச்சி செய்து தடை போடுவதாக விஜய் குற்றஞ்சாடி உள்ளார்.....
தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமமாக சென்று மகக்ளை சந்திப்பேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் பல நாட்கள் ஆகிவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்......பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் சாடியுள்ளார்....
வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.....
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்....
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின், வாக்குறுதிகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்..
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது......
கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை கூடுதல் தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
