Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2026)

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை?

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் இன்னும் 2 நாட்களில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது...

ஐபிஎல் - கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தியது..

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 192 ரன்கள் குவித்த நிலையில், கொல்கத்தா அணி 160 ரன்களில் சுருண்டது...

சட்டமன்ற தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது...

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்...

"டெல்லியின் ஆணவத்துக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்"

தமிழர்களின் தன்மானத்தின் மீது கை வைத்தால் டெல்லியின் ஆணவத்துக்கு தரும் பதிலடி கடுமையாக இருக்கும்...

தமிழகத்தின் உரிமைக்காக கடைசி மூச்சுவரை போராடுவேன் என்றும் வேலூர் பிரசாரத்தில் தெரிவித்தார்..

"தமிழகத்தின் உரிமைக்காக கடைசி மூச்சுவரை போராடுவேன்"

நாளை முதல் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை முதல் நடைபெறுகிறது..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com