Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20.06.2026) | 11 AM Headlines | ThanthiTV

Summary
  • மாற்றுகட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுடன் செய்தியாளர் மணிகண்டன் வழங்க கேட்கலாம்..

  • மாற்றுகட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.

  • மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...மதுரை ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா, சிவகங்கை ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம்...

  • சென்னை மாநகராட்சி இணை ஆணையராக ஸ்ரேயா பி. சிங்கும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் நியமனம்...புவியியல், சுற்றுலாத்துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...

  • நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளைத் தடுக்க, தேசிய தேர்வு முகமை சார்பில் நாடு தழுவிய மாதிரி பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது...நாளை மறுதேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அனைத்தும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் என்.டி.ஏ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன...

  • நாளை நடைபெறவுள்ள நீட் மறுதேர்வில் நாக்பூரைச் சேர்ந்த மாணவருக்கு, தவறுதலாக அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்...தேசிய தேர்வு முகமை உடனடியாக பிழையை சரிசெய்து, மாணவருக்கு நாக்பூரிலேயே தேர்வு மையம் வழங்கியதாக அதிகாரிகள் தகவல்...

  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை தேடி சென்னை ஆர்.ஏ.புரத்திற்கு வந்த கரூர் போலீசார்...அசோக்குமார் ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, விசாரணையை முடித்துக் கொண்டு திரும்பினர்...

  • சென்னையில் இன்று மேகமூட்டம் அதிகரித்து காற்றில் ஈரப்பதம் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...சூரிய வெளிச்சம் குறைவதால் பகல் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது...

  • பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது...தற்போது 1,642 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக 183 கன அடி திறக்கப்படுகிறது...

  • திருப்பதியில் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜூன் 22 முதல் ஆன்லைனில் வெளியாகின்றன...தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com