Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (31.07.2026) | 11 AM Headlines | Thanthi TV
மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை...
கர்நாடக அரசு நீர் திறக்க மறுக்கும் நிலையில், அரசு தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்...
தமிழக முதலமைச்சரின் கர்நாடகப் பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது...
முதல்வரின் பயணம் விவசாயிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது...
தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரை திறந்து விடக் கூடாது என வலியுறுத்தி, கர்நாடகாவின் ராமநகரத்தில் கன்னட அமைப்பினர் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்...
உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் விரைவில் 'கர்நாடகா பந்த்' நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்...
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது...
ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது....
கரூர் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பல ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...
கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் என்றும், செங்கோட்டை - ஈரோடு ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
