Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2026) | 11 AM Headlines | Thanthi TV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2026)

முதலமைச்சரான பின் முதல்முறையாக நாளை கரூர் செல்கிறார் CM விஜய்....

ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான புதிய காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு துறைகளின் கீழ் 32 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார்...

கரூர் வரும் முதலமைச்சர் விஜய், சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ செல்ல திட்டமிட்டுள்ளார்...

முதலமைச்சரின் வருகையையொட்டி 6 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்...

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது....

ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 220 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது...

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை...

காவலில் எடுக்கப்பட்ட 5 நபர்களையும் தனித்தனி அறைகளில் வைத்து போலீசார் விடிய விடிய கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாளுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது...

சிங்கப்பூரில் இருந்தபடியே ஹோட்டல் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் போன்ற முக்கிய ஆதாரங்களை அழித்ததாகப் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com