Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.04.2026)| 1 PM Headlines | Thanthi TV
சீமான் போட்டியிடும் தொகுதியில் விஜய் பிரசாரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்...
மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது...
ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து125 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
சென்னை விமானநிலையம்
விஜய்யுடன் எந்த காங்கிரஸ்காரர்களும் இல்லை - டி.கே.சிவக்குமார்
விஜய்யுடன் எந்த காங்கிரஸ்காரர்களும் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்...
சினிமாவில் பேசும் வசனங்கள் அரசியலில் எடுபடாது என்றும், விஜய் மக்களை முட்டாளாக்க பார்ப்பதாகவும் சாடியுள்ளார்...
சினிமா வசனம் அரசியலில் எடுபடாது - டி.கே.எஸ்
மக்களோடு மக்களாக மெட்ரோவில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை சென்ட்ரல் முதல் டிஎம்எஸ் வரை மெட்ரோ ரயிலில் மக்களோடு மக்களாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பயணித்தார்...
பயணத்தின் போது மக்களிடம் கலந்துரையாடிய அவர் திமுகவின் சாதனைகளை கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்...
