Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.02.2026) | 1PM Headlines | ThanthiTV
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு கிராம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கும்,ஒரு சவரன் 1 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது...வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து. ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது...
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வருகிறார்...மதுரையில் நாளை பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் NDA கூட்டணியின் பிரசாரத்தில் பங்கேற்கவுள்ளார்...
திமுக, ஐயூஎம்எல் இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது...2021ல் திமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல்-க்கு வரும் தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மாலை தமிழகம் வருகிறார்...மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில்,அதிமுக தரப்பில் 25 முதல் 28 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 4ல் தஞ்சையில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது...தஞ்சையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 5000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது...தீர்ப்பு தேதியை மதுரை மாவட்ட நீதிமன்றம். நாளை மறுநாள் அறிவிக்கிறது...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மெர் நகரில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது...தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள “முத்து என்கிற காட்டான்“ வெப் தொடரின் டீசர் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது...இத்தொடர் வரும் மார்ச் 27ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது...
டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன... அரையிறுதிக்குள் நுழைய, அதிக ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துடன் பாகிஸ்தான் களம் காண்கிறது...
