Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.03.2026) | 1PM Headlines | ThanthiTV
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது சிலர் தாக்குதல்
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் 2 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்....
பல்வேறு புதிய திட்டங்களுக்கும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்...
டபுள் எஞ்சின் ஆட்சியால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்......
என்.டி.ஏ. டபுள் எஞ்சின் கூட்டணி அரசு மேலும் வளர்ச்சியை கொடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்....
காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எண்ணற்ற இன்னல்களை சந்தித்ததாக பிரதமர் மோடி குற்றஞ்ச்சாட்டி உள்ளார்...
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு திமுக, காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்...
மதுரையில் நடைபெறும் என்டிஏ மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்...
பிரதமரின் வருகையால் மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்...
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால், அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொள்வதாக எக்ஸ் தள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்...
இன்று 73-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.....
வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வருக்கு, திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்துகளை கூறினார்...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்...
முதல்வர் ஸ்டாலின், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன் என்று எக்ஸ் தள பக்கத்தில் ஆளுநர் பதிவிட்டுள்ளார்...
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு துறை ஆளுமைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்..
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை பகிர்ந்த வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது....
காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து துபாய், கத்தார், இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது ஈரான் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.......
பெருநகரங்களில் சைரன்கள் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.....
ஈரானின் பதிலடி தாக்குதலில் துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது......
ஈரானின் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில், அதன் சிதறல் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
வரலாற்றில் முதல் முறையாக ஈரான் மீதான தாக்குதலுக்கு, அமெரிக்க ராணுவம் தற்கொலைப்படை டிரோனை பயன்படுத்தி உள்ளது....
ஈரானின் புகழ்பெற்ற Shahed-136 ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே LUCAS தற்கொலைப்படை ட்ரோனை உருவாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது....
