Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.04.2026) | 6 AM Headlines | ThanthiTV
புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது...
மொத்தம் 12 ஆயிரத்து 591 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ள நிலையில், 1,099 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன...
கேரளம், அசாமிலும் இன்று வாக்குப்பதிவு
கேரளத்தில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு...
அதே போல் அசாமில் உள்ள126 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன...
மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,720 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் உயர்ந்துள்ளது....
ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது...
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியதால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது...
2 வாரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிடாததால் ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
LPG போதுமான அளவு கையிருப்பு உள்ளது - பெட்ரோலியத்துறை
LPG சிலிண்டர் போதுமான அளவு கையிருப்பு உள்ளது...
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் மத்திய பெட்ரோலியத்துறை விளக்கம் அளித்துள்ளது...
"பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை"
தமிழ்நாடு தேர்தல் - இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்...
இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
