Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2026) | 1 PM Headlines | ThanthiTV
விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தவர்கள் விபத்தில் சிக்கினர்“
தூத்துக்குடி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்க்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்....
போலீஸ் எச்சரிக்கையையும் மீறி விஜய், வாகனத்தை பின் தொடர்ந்து சென்றவர்கள் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...
நடிகர்கள் பின்னால் சென்றால்.... இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை
நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயப்பட்டால் அது உங்களுக்கு தான் ஆபத்து என்று இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்....
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.... போதைப் பழக்கம் உடையவர்களிடம் பழகாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்....
படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்
கஞ்சா மதுப்பழக்கமுடைய நண்பர்கள் அருகில் கூட சென்று விடாதீர்கள் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி:-
ஈரான் - அமெரிக்கா இடையே 2 வாரம் போர் நிறுத்தம்
அமெரிக்கா - ஈரான் இடையே 2 வார காலம் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாட்டை எட்டியுள்ளது.....
தங்களின் கோரிக்கைகளை அமெரிக்கா பரிசீலிப்பதாக கூறியதால் ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது......
