Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23.02.2026) | 07 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23.02.2026)

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர்...

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பாக இருந்த வாக்காளர்களில் 74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்...27 லட்சத்து 85 ஆயிரத்து195 பேர் புதிதாக இணைந்துள்ளனர்...வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்...

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சாத்தான்குளத்தில் பள்ளி மாணவர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்..சாதி வெறி காரணமாக மாணவன் தாக்கப்பட்டதாகவும், தாக்கியவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்..

எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்...சென்னையில் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரசுக்கான தொகுதி எண்ணிக்கை இனிதான் உறுதி செய்யப்படும் என்று கூறினார்..

திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது......

கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை கூடுதல் தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..

அதிமுகவின் அழுத்தத்தால் 5ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்...

தேர்தலை காரணம் காட்டி உரிமைத்தொகையை நிறுத்தக்கூடும் என்பதாலேயே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்தோம் என்று அவர் கூறியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com