Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.04.2026) | 1 PM Headlines | ThanthiTV
வாக்குப்பதிவு நாளன்று தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது...
விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக வேட்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்....
சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...
தேர்தல் பணிகள் குறித்து
ஆலோசனை
சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபில் போட்டியைக் காண டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்...
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு....
"போட்டிக்கான டிக்கெட்டை
காட்ட வேண்டும்"
அமெரிக்க ராணுவ தளபதி பதவி நீக்கம்
ஈரானுக்கு போருக்கு மத்தியில் அமெரிக்க ராணுவ தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...
பதவி நீக்கத்திற்கான காரணம் தெரிவிக்காத நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹோட்டல் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த நிலையில் ஹோட்டல் முற்றிலும் சேதம் அடைந்தது.....
