Madurai | உயிரிழந்த நண்பன்..இறுதி ஊர்வலத்தில் இளைஞர்கள் செய்த செயலால் மக்கள் அவதி

உயிரிழந்த நண்பன்..இறுதி ஊர்வலத்தில் இளைஞர்கள் செய்த செயலால் மக்கள் அவதி
Summary

அலங்காநல்லூரை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்செல்லப்பட்ட‌து. அப்போது, ஆம்புலன்ஸ்க்கு முன்னால் கார்த்தியின் நண்பர்கள் பைக்குகளை முறுக்கியபடியும், வீலிங் செய்தும் சாலையில் நடுவே அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைகையாற்று கரையோரம் வரை இவ்வாறு ஊர்வலமாக சென்ற‌தால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து. மதுரையின் பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட பைக்குகளில் சாகசங்களில் ஈடுபட்டபடி, கோஷமிட்டு சென்ற‌தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும், பள்ளி முடிந்து சென்ற மாணவ, மாணவிகளும் அச்சமடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com