இளைஞர் அஜித்குமார் மரணம் - போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி
அஜித்குமார் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி
திருப்புவனம் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மலம் வெளியே வந்தது உட்பட 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், வலது கை மூட்டுக்கு மேலே காயம், வலது கை மணிக்கட்டுக்கு கீழே சிராய்ப்பு காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலது பக்க நெற்றியில் சிராய்ப்பு காயம், வலது பக்க கன்னத்தில் சிராய்ப்பு காயம் கண்டறியப்பட்டுள்ளது.
இடது பக்க காதில் ரத்தம் உறைந்த நிலையிலும் வடிந்த நிலையிலும் உள்ளதாகவும், இடது புஜத்தில் சிராய்ப்பு காயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இடது பக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை காயம், இடது பக்க கை மூட்டில் 4 சிராய்ப்பு காயங்கள்,
இடது கை மணிக்கட்டுக்கு மேல் பகுதியில் மூன்று சிராய்ப்பு காயங்கள், இடது பக்க விலாவில் காயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இடது கரண்டை காலில் சில சிராய்ப்பு காயம். கை விரல்கள் உட்புறமாக மடங்கி விரைப்பாகவும், இடது பக்க முதுகில் விலா பின்புறம் காயம் தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடது பக்க இடுப்பில் சிராய்ப்பு காயம், வலது பக்க பின் முதுகில் சிராய்ப்பு காயம் இருந்ததாகவும்,
மலம் போன நிலையில் உள்ளதாகவும், இடது கால் இடது மணிக்கட்டுக்கு மேல் தோல் பிரிந்த காயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இடது கால் பாதத்திற்கு மேல் சிராய்ப்பு காயம் மற்றும் வலது பக்க காதில் உள்பக்கமாக ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
