தொடர்ச்சியாக 4வது தோல்வி.. WPL லையும் விடாத சோதனை - அடிமேல் அடிவாங்கும் ஆர்சிபி

x
  • மகளிர் பிரீமியர் லீக் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியை,10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.
  • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி, 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • வாரியர்ஸ் அணி தரப்பில் எக்கிளஸ்டோன் 4 விக்கெட்டுகளையும், தீப்தி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
  • தொடர்ந்து ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி, விக்கெட் இழப்பின்றி 139 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி வீராங்கனை அலைசா ஹீலி, ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் சேர்த்தார்.
  • இதன்மூலம் 4-ஆவது தொடர் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்