விப்ரோ ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி... புதிய ஊழியர்களுக்கு சம்பளம் பாதியாக குறைப்பு

x
  • புதிதாக சேர்கக்ப்பட்ட ஊழியர்களில் 425 பேரை கடந்த மாதம் வேலை நீக்கம் செய்த விப்ரோ நிறுவனம், அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது.
  • சுமார் மூன்றாயிரம் புதிய ஊழியர்களை, ஆறரை லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்திற்கு பணியமர்த்த வேலை உறுதி கடிதம் அனுப்பியிருந்தது
  • . இந்நிலையில் அவர்களின் ஆண்டு சம்பளத்தை மூன்றரை லட்சம் ரூபாயாக குறைப்பதாக அறிவித்துள்ளது
  • . இதற்கு விருப்பமுள்ளவர்கள் பணியில் சேரலாம் என்றும், விருப்பம் தெரிவிக்காதவர்கள், காத்திருக்கலாம் என்று கூறியுள்ளது.
  • உலக அளவில் பொருளாதார சூழல் மாறியுள்ளதால், இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக விப்ரோ கூறியுள்ளது.
  • 2022-23இல் இதுவரை மொத்தம் 17 ஆயிரம் பேரை பணிக்கமர்த்தியுள்ள விப்ரோவில் 2.58 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
  • அதே சமயத்தில் டி.சி.எஸ் நிறுவனம் ஆட்குறைப்பு எதுவும் செய்யப் போவதில்லை என்றும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப் போவதகாவும் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்