இந்தியாவில் 36.77 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் 13 லட்சத்து 89 ஆயிரம் கணக்குகளை எந்தஒரு முன் அறிவிப்பும் இன்றி முடக்கியதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டதாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது எனவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

இதுவே கடந்த நவம்பர் மாதம் 37 லட்சத்து 16 ஆயிரம் கணக்குகளை முடக்கியிருப்பதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com