சபரிமலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன்..! அசத்தலான பதிலோடு வந்த 'AK 62 அப்டேட்'

x

திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். நண்பர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 வயது முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவதாக தெரிவித்தார்.

தொடர் வேண்டுதல் காரணமாக தனது வாழ்வு நன்றாக இருப்பதாக விக்னேஷ் சிவன் கூறினார்.

தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கேள்வி புரிவதற்கே இரண்டு நாட்கள் ஆகும் என சிரித்தவாறு தெரிவித்தார்.

நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த கேள்விக்கு, 'சாமியே சரணம்' என்று கூறிவிட்டு விக்னேஷ் சிவன் புறப்பட்டு சென்றார்.




Next Story

மேலும் செய்திகள்