"5 மாதங்களில் மகளிருக்கு ரூ. 1000" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

x
  • ஆடியோ, வீடியோவை வைத்து ஓட்டி கொண்டிருக்கும் பாஜக ஒரு கட்சியா என விளையாட்டு நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், வாக்காளர்களிடையே உரையாற்றினார்.
  • அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விட்டால் ஒவ்வொரு மாதமும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வந்து செல்வதாக உறுதியளித்தார்.
  • தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.
  • பின்னர், அதிமுக பாஜகவிற்கு அடிமையாக உள்ளது என புகார் தெரிவித்தார்.
  • பாஜக ஆளுநர்களுக்கான டிரைனிங் சென்டர் நடத்துவதாகவும், விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் ஆகி விடுவார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்