உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 4 ,000 -ஐ தாண்டியது

x

துருக்கி, சிரியாவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.

சிரியா எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துருக்கியின் காஸியான்டெப் பகுதியை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் சீட்டுக்கட்டாக சரிந்து விழுந்தன.


இந்த துயரத்தில் என்ன நடந்தது என தெரியாமலே பலர் இறந்து விட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடருகிறது.

இதற்கிடையே துருக்கியின் எல்பிஸ்தான், சிரியாவின் டமாஸ்கஸ் பகுதிகளிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதாலும், இடிபாடுகளில் இருந்து சடலமாக பலர் மீட்கப்படுவதாலும் பலி எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 4 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடைய இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்