பெண்ணை அடித்து தரதரவென இழுத்து சென்ற கொடூர திருடன்... விரட்டி பிடித்து மாவுக்கட்டு போட்ட போலீஸ் - திருச்சியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
- சீதாலட்சுமி என்ற 53 வயது பேராசியர் கடந்த 12ம் தேதி மாலை ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.
- இதை கவனித்த மர்ம நபர் ஒருவர், சீதாலட்சுமியை பின் தொடர்ந்து வந்து உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்து, அவரை தரதரவென இழுத்துச் சென்று ஓரமாக போட்டு விட்டு, அவரின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
- இது குறித்து சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தஞ்சையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரைக் கைது செய்தனர்.
- மதுபோதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான இவர், தற்போது தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் தங்கி உள்ள நிலையில், அவரைப் போலீசார் பிடிக்க முயன்ற போது திருடிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார்.
- அவரது கால் உடைந்தது.
- காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இந்நிலையில், சீதாலட்சுமியை செந்தில்குமார் தாக்கும் பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Next Story