பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம்... இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

x

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் திருநாளையொட்டி ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத்‌ தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்