காலை 11மணி தலைப்புச் செய்திகள் (26.07.2025)| 11 AM Headlines| ThanthiTV

x
  • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய இளைஞர்...தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சியில் ரயிலில் பயணிப்பது தெரிய வந்த நிலையில், அதன்மூலம் சிக்கியதாக தகவல்...
  • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு...
  • கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநில இளைஞரிடம் போலீசார் 2ஆம் கட்ட விசாரணை...
  • கனமழை எதிரொலியாக உதகையில் இரவா பகலா என தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம்...காற்றுடன் மழை பெய்வதால் தொட்டபெட்டா மலை சிகரம், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன...
  • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர்ன் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
  • கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு...
  • கல்வி நிலையங்களில் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள் ஏற்படுத்த வேண்டும்...மத்திய, மாநில அரசுளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
  • 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி...
  • பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது உறுதி...திருச்சி விமான நிலையத்தில் இன்று இரவு 10.45 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல்...
  • கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி இறங்க உள்ள ஹெலிபேட் திடீர் மாற்றம்...உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால், மாற்று இடத்தில் இரவோடு இரவாக ஹெலிபேட் அமைப்பு...
  • பிரதமர் மோடி வருகையையொட்டி, தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரத்து 100 போலீசார்...
  • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிவு...ஒரு சவரன் 73 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை...

Next Story

மேலும் செய்திகள்